நமது கிராமத்தில் பிராமணர் தெருவில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீதேவி பூதேவி சமேத ஆதிநாராயண பெருமாள் திருக்கோயில் கடந்த 2012 ஆம் ஆண்டு கட்டப்பட்டு மீண்டும் அது புனரமைக்கப்பட்டு 12 வருடங்களுக்குப் பிறகு மகா கும்பாபிஷேகம் செய்யப் பட உள்ளது. இதற்கான பணிகள் மற்றும் செலவீனங்கள் முழுமைக்கும் அருள்மிகு ஸ்ரீதேவி பூதேவி சமேத ஆதிநாராயண பெருமாள் திருக்கோவில் அறக்கட்டளை சார்பில் சுமார் 15 லட்சத்திற்கு மேல் செலவிடப்பட்டு தற்போது பணிகள் நிறைவு பெற்று கும்பாபிஷேகத்துக்கு தயார் செய்யப்பட்டுள்ளது
இன்றைய தினம் திங்கட்கிழமை
மாலை 5:30 மணி அளவில் யாகசாலை பூஜைகளுடன் தொடங்கி கும்பாபிஷேக பணிகள் நடைபெற உள்ளது
நாளை செவ்வாய்க்கிழமை காலை
மாலை என இரு வேலைகளும் இரண்டு கால யாகசாலை பூஜைகள் நடைபெற உள்ளது
நாளை மறுதினம் புதன்கிழமை
20 /11/ 2024 அன்று காலை 6 மணிக்கு மேல் 8:00 மணிக்குள்ளாக மகா கும்பாபிஷேக சம்பரக்ஷ்க்ஷனை சிறப்பாக நடைபெற உள்ளது எனவே கிராம பொதுமக்கள் அனைவரும் மேற்படி நிகழ்வில் கலந்து கொண்டு ஒத்துழைத்து இந்த நிகழ்வு சிறப்பாக நடைபெற உங்களுடைய மேலான ஒத்துழைப்பையும் பங்களிப்பையும் அளிக்குமாறு ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்
கீழ்கண்ட நிகழ்ச்சி நிரலில் உள்ளபடி கும்பாபிஷேகம் நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற உள்ளது
ஏற்கனவே உறுதி அளித்துள்ளபடி நமது கிராமத்தில் சார்பில் பங்கு தொகையாக குடும்ப அட்டைக்கு
ரூ 500 /வீதம் வசூல் செய்து கோயில் நிர்வாகிகளிடம் ஒப்படைக்கப்பட உள்ளது எனவே மேற்படி தொகையினை எவ்வித சஞ்சலங்களுக்கு இடம் இன்றி அனைவரும் நிதியை அளித்து ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்